Coffee குடிப்பதன் மூலம் பெண்களுக்கு தீவிர மார்புப் புற்றுநோயை கணிசமான அளவுக்குத் தடுத்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என்று இது சம்பந்தமாக நடத்தப்பட்ட ஆய்வுகளில் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூடான பானங்களை வழமையாக அருந்துகின்றவர்களுக்கு இந்த நோயின் பாதிப்பு குறைவாகவே காணப்படுகின்றது.குறிப்பாக ஒரு நாளைக்கு ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட தடவைகள் Coffee அருந்துவது சிறந்தது. மார்புப் புற்றுநோய் பெரும்பாலும் மருந்துகளால் குணப்படுத்த முடியாதது.
கெமோதெரபி(chemotherapy) சிகிச்சை தான் அதற்குரிய மிகச் சிறந்த தெரிவு. Coffee அருந்தும் பெண்கள் அந்தப் பழக்கம் அற்ற பெண்களை விட மிகவும் குறைந்த அளவிலேயே மார்புப் புற்றுநோய்க்கு ஆளாகின்றனர் என்று ஸ்டொக்ஹோமின் கரோலின்ஸ்கா நிறுவன ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதில் 6000 பெண்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் ஐந்து கப் அல்லது அதற்கு மேற்பட்ட அளவு Coffee அருந்தும் பெண்களுக்கு மார்புப் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து 57 சதவீதம் குறைவாகவே இருந்தது.