கிரகணத்தின் போது செந்நிறமான சந்திரன் கடந்த பத்தாண்டு காலத்தில் மிக நீண்டநேரம் நீடித்த சந்திரக் கிரகனத்தை இன்று உலக நாடுகள் பலவற்றின் வான்பரப்பிலும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
ஆனால் பிரிட்டிஷ் மக்களுள் பலரால் இதைப் பார்க்க முடியவில்லை.வழமைக்கு மாறாக இன்றைய சந்திரக் கிரகணத்தின் போது சந்திரன் இரத்தச் சிவப்பு நிறத்தில் காணப்பட்டமை அவதானிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முக்கிய காரணம் தற்போது சிலியில் இடம்பெற்று வருகின்ற பாரிய எரிமலை வெடிப்பும்,அதிலிருந்து வெளிப்படும் எரிமலைக் குழம்பும் ஆகும்,என்று வஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த எரிமலை வெடிப்பு காரணமாக வளிமண்டலத்தில் தூசு அதிகம் படர்ந்துள்ளமையே சந்திரன் நிறம் மாறித் தெரிய காரணம் என்றும் அவர்கள் விளக்கியுள்ளனர்.
ஆசிய நாடுகள் பலவற்றில் சந்திரக் கிரகணத்தைக் காணக் கூடியதாக இருந்தது. இந்தப் பகுதியில் சந்திரன் கடும் சிவப்பு நிறமாகத் தெரிந்தது. ரஷ்யா,பெல்ஜியம்,சேர்பியா அகிய நாடுகளில் எடுக்கப்பட்ட சந்திரக் கிரகணக் காட்சிகளே இங்கு தரப்பட்டுள்ளன.