நாயுருவிச் செடியில் உள்ள மருத்துவப் பயன்கள் [You must be registered and logged in to see this link.] பார்க்கும் இடத்தில் எல்லாம் களைச்செடிபோல சாதாரணமாக முளைத்திருக்கும் நாயுறுவிச் செடியில் பல்வேறு மருத்துவப் பயன்கள் உள்ளன. சாலை ஓரங்கள், பயன்படுத்தாத நிலங்களில் காணப்படும் இந்த தாவரத்தின் உறுப்புகள் மற்றும் விதைகள் மருத்துவ பயன் கொண்டவை.
பெயர்க்காரணம்நாயுறுவி செடிக்கும் நாய்க்கும் நிறைய தொடர்பு உண்டு. இம்மூலிகை நாய்க்கடி விஷத்தை முறிக்கக் கூடியது. இம்மூலிகைக்கு நாய் வணங்கி என்றொரு பெயரும் உண்டு.
நாய் இந்த செடியின் மேல் படுத்து உருளும் பழக்கம் உடையது. அந்த வேளையில் இதன் விதைகள் முள்ளைப் போல் நாயின் உடல் எங்கும் பற்றிக்கொண்டு விடும். இதுவே இம்மூலிகைக்கு இப்பெயர் ஏற்பட காரணமாகும். இந்த செடியின் விதைகள் நம்மேல் பட்டால் சிறிது நேரத்திற்கு நமைச்சல் ஏற்படும்.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்இத்தாவரத்தில் பிடைனி, அக்கிரான்தைன், ஹென்டிரிஅகோன்டேன், ஒலியனோலிக் அமிலத்தின் குளுகோசைடுகள் உள்ளன. விதைகளில் அமினோ அமிலங்கள் காணப்படுகின்றன.
மூல நோய்க்கு மருந்துமூலக்கட்டிகளுக்கு வேரின் பொடி தேனுடன் கலந்து உட்கொள்ளப்படுகிறது. அரிசி கஞ்சியில் சேர்க்கப்பட்ட விதைகள் மூல நோய் இரத்தப் போக்கிற்கு மருந்தாகிறது. வேரின் கசாயம் வயிற்றுப் போக்கினை தடுக்கிறது. வேரின் பசை கருச்சிதைப்பிற்குப்பின் ஏற்படும் ரத்தப் போக்கினை நிறுத்தும்.
சிறுநீராக நோய்முழுத்தாவரத்தின் கசாயம் சிறுநீர்ப்போக்கினை தூண்டுகிறது. சிறுநீரக நோய்களுக்கு மருந்தாகிறது. உலர்ந்த தாவரம் குடல்வலி மற்றும் கோனேரியாவிற்கு மருந்தாகிறது. மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. தண்ணீர் மற்றும் வெல்லத்துடன் கரைந்த தாவரத்தின் சாம்பல், திசுக்கள் மற்றும் தோலுக்கு கீழாகச் சேர்த்த நீர்க் கோர்வையினைப் போக்கும்.
நுரையீரல் நோய்க்கு மருந்துநாயுறுவி செடியின் விதைகளை காயவைத்து இடித்து தூள் செய்து சலித்து போத்தலில் வைத்து தினசரி காலை, மாலை இரு வேளை 10 மில்லி பாலில் சாப்பிட்டு வர நுரையீரல் நோய் குணமாகும்.
விஷக்கடி குணமடையும்இலையின் பசை விஷ பூச்சிக் கடிக்கு மருந்தாகிறது. நாயுருவி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து, வெட்டுக் காயத்தின் மீது பூசிவர விரைவில் ஆறிவிடும். நல்லெண்ணெயில் தாவரத்தின் சாம்பல் சேர்த்து தயாரித்த ‘ அப்பமார்க்’ தைலம் காதுவலிக்கு மருந்தாகிறது.
ரத்தச்சிக்கலை நீக்கும்நாயுறுவி செடி விதைகளை பொடி செய்து உட்கொண்டால் மூக்கு மற்றும் சுவாசம் தொடர்பான நோய்கள் குணமாகும். மந்தம், அதிசாரம், கபநோய், ரத்தப்போக்கு, குன்மம் முதலியன குணமாகும்.
இதன் இலைச்சாறு வயிற்றுவலி, குன்மம் இவைகட்கு வழங்கப்படும். இதன்வேர் சூரணத்துடன் மிளகுச்சூரணம் அல்லது திப்பிலி சூரணத்துடன் சேர்த்து தேனில் அருந்த இருமல் தீரும். இதன் சமூலத்தைச்சுட்டு சாம்பலாக்கி 5 குன்றி எடை வீதம் வெல்லத்தில் கொடுக்க ரத்தச்சிக்கலை நீக்கும்.