விடுகதை..!
-1. ஓயாமல் இரையும் இயந்திரமல்ல, உருண்டோடி வரும்
பந்தும் அல்ல அது என்ன?
2. சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?
3. மரத்துக்கு மரம் தாவுவான் குரங்கல்ல, பட்டை
போட்டிருப்பான் சாமி அல்ல, அவன் யார்?
4. அடிக்காத பிள்ளை அலறித் துடிக்கும், அது என்ன?
5. அக்கா விதைத்த முத்து, அள்ள முடியாத முத்து,
அது என்ன?
6. வீட்டிலிருப்பான் காவலாளி, வெளியில் சுற்றுவான்
அவன் கூட்டாளி, அவர்கள் யார்?
7. எத்தனை தரம் சுற்றினாலும் தலை சுற்றாது,
அது என்ன?
8. உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு,
அது என்ன?
9. உருவத்தில் சிறியவன் உழைப்பில் பெரியவன்,
அவன் யார்?
10. மழை காலத்தில் பிடிப்பான், அவன் யார்?
விடை:
10. காளான்
09. எறும்பு
08. பாய்
07. மின்விசிறி
06. பூட்டும் திறப்பும்
05. கோலம்
04. சங்கு
03. அணில்
02. கண்
01. கடல்