அமெரிக்காவின் இரு வீதிகளுக்கிடையில் அபூர்வமாகத் தெரிந்த சூரிய உதயமும் அஸ்தமனமும்! (பட இணைப்பு) [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]இயற்கை அழகு மிகுந்த விடயங்களில் எல்லோரையும் கவரும் ஒரு முக்கிய விடயம் சூரிய உதயமும், சூரிய அஸ்தமனமும் என்றால் அது மிகையாகாது.
அமெரிக்காவின் மன்ஹேட்டன் பகுதியின் குறுக்கு வீதிகள் ஊடாக சூரிய உதயமும், சூரிய அஸ்தமனமும் கண் கொள்ளாக் காட்சிகளாகப் படமாக்கப் பட்டுள்ளன.
ஒரு வருடத்தில் குறிப்பிட்ட ஒரு காலப்பகுதியில் தான் இங்கு இந்த எழில் கொஞ்சும் காட்சிகளை இவ்வளவு தத்ரூபமாகக் காண முடியுமாம். இதை “ மன்ஹேட்டன்ஹென்ஜ் ” காலம் என்று வர்ணிக்கின்றனர்.
இவ்வருடம் மே மாதம் 30ம் திகதி இந்தத் தினம் ஏற்பட்டுள்ளது. இந்தக் காலப்பகுதியில் ஒரே நேரத்தில் சூரிய ஒளிக் கதிர்கள் பட்டு மன்ஹேட்டனின் வடக்கு மற்றும் தெற்கு வீதிகள் பொன்னிற விளக்குகள் போடப்பட்டது போல் ஜொலிக்கும்.
மன்ஹேட்டனின் பூகோள ரீதியான அமைவிடம்தான் இதற்குக் காரணமாகின்றது.
[You must be registered and logged in to see this image.]