கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
அன்பு உள்ளங்களே, கடவுள் இருக்கிறாரா? Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
அன்பு உள்ளங்களே, கடவுள் இருக்கிறாரா? Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
அன்பு உள்ளங்களே, கடவுள் இருக்கிறாரா? Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
அன்பு உள்ளங்களே, கடவுள் இருக்கிறாரா? Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
அன்பு உள்ளங்களே, கடவுள் இருக்கிறாரா? Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
அன்பு உள்ளங்களே, கடவுள் இருக்கிறாரா? Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
அன்பு உள்ளங்களே, கடவுள் இருக்கிறாரா? Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
அன்பு உள்ளங்களே, கடவுள் இருக்கிறாரா? Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
அன்பு உள்ளங்களே, கடவுள் இருக்கிறாரா? Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
அன்பு உள்ளங்களே, கடவுள் இருக்கிறாரா? Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
அன்பு உள்ளங்களே, கடவுள் இருக்கிறாரா? Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
அன்பு உள்ளங்களே, கடவுள் இருக்கிறாரா? Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
அன்பு உள்ளங்களே, கடவுள் இருக்கிறாரா? Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
அன்பு உள்ளங்களே, கடவுள் இருக்கிறாரா? Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
அன்பு உள்ளங்களே, கடவுள் இருக்கிறாரா? Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
அன்பு உள்ளங்களே, கடவுள் இருக்கிறாரா? Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
அன்பு உள்ளங்களே, கடவுள் இருக்கிறாரா? Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
அன்பு உள்ளங்களே, கடவுள் இருக்கிறாரா? Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
அன்பு உள்ளங்களே, கடவுள் இருக்கிறாரா? Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
அன்பு உள்ளங்களே, கடவுள் இருக்கிறாரா? Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 அன்பு உள்ளங்களே, கடவுள் இருக்கிறாரா?

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

அன்பு உள்ளங்களே, கடவுள் இருக்கிறாரா? Empty
PostSubject: அன்பு உள்ளங்களே, கடவுள் இருக்கிறாரா?   அன்பு உள்ளங்களே, கடவுள் இருக்கிறாரா? Icon_minitimeWed May 04, 2011 8:43 pm

அன்பு உள்ளங்களே, கடவுள் இருக்கிறாரா?

-அன்பு உள்ளங்களே, கடவுள் இருக்கிறாரா?

கடவுள் எங்கே இருக்கிறார்?

நாத்திகவாதியான ஒரு தத்துவப் பேராசிரியர் கடவுளி‎‎ன் இருப்பைப் பற்றி வகுப்பறையில் விளக்கிக் கொண்டிருந்தார். கடவுளை அறிவியல் ஆணித்தரமாக மறுப்பதைப் பற்றிப் பேசிய அவர், ஒரு மாணவரை எழுப்பி கேள்வி கேட்கலானார்.

“நீ கடவுளை நம்புவதாகச் சொல்கிறாய். இல்லையா?”

“நிச்சயமாக ஐயா..”

“கடவுள் நல்லவரா?”

“ஆம் ஐயா.”

“கடவுள் அளப்பரிய சக்தி படைத்தவரா?”

“ஆம்.”

“எ‎ன்னுடைய சகோதரர் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டார். த‎ன்னைக் காப்பாற்ற கடவுளிட‎ம் அவர் மனமுருகிப் பிரார்த்தனை செய்தபோதும் கடவுள் கைவிட்டு விட்டார். நாம் எல்லோருமே நோய்வாய்ப்பட்டோர்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்கிறோம். ஆனால் கடவுள் அவர்களைக் காப்பாற்றுவதில்லை. பி‎ன் எப்படிச் சொல்கிறாய் கடவுள் நல்லவர் எ‎ன்று?”

(மாணவர் அமைதியாய் இருக்கிறார்)

“உ‎ன்னால் பதில் சொல்ல முடியவில்லை. இல்லையா? சரி.. நாம் மீண்டும் ஆரம்பிப்போம். கடவுள் நல்லவரா?”

“ஆம் ஐயா..”

“சாத்தா‎ன் நல்லவரா?”

“‏இல்லை.”

“எல்லாமே கடவுள் படைப்புத்தா‎ன் என்றால் சாத்தா‎ன் எங்கிருந்து வந்தார்?”

“கடவுளிடமிருந்துதா‎ன்.”

“சரி. இந்த உலகத்தில் கெட்டவை ‏இருக்கின்றனவா?”

“ஆம்.”

“அப்படியெ‎ன்றால் அவற்றை உருவாக்கியது யார்?”

(மா‎ணவர் பதில் சொல்லவில்லை)

“இவ்வுலகத்தில் பசி இருக்கிறது, பஞ்சம்‏ இருக்கிறது, மூட‎ நம்பிக்கைகள் இருக்கி‎ன்றன. ‏ ‏ இவையெல்லாம் எங்கேயிருந்து வந்தன?”

……

“அறிவியல் சொல்கிறது, விஷயங்களைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு நமக்கு ஐம்புல‎ன்கள் இருக்கி‎‎ன்றனவென. இப்போது சொல். கடவுளைக் கண்ணால் கண்டிருக்கிறாயா? அவர் பேசுவதைக் காதால் கேட்டிருக்கிறாயா? அல்லது வேறு எப்படித்தா‎ன் அவரது இருப்பை உணர்ந்திருக்கிறாய்?”

…….

“ஆனாலும் நீ கடவுளை நம்புகிறாய்?”

“ஆம் ஐயா..”

“நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுட‎ன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது ‘கடவுள் ‏ இல்லை’ என்று. ‏ இதற்கு நீ எ‎ன்ன பதில் சொல்லப் போகிறாய்?”

“ஒ‎ன்றுமேயில்லை. எனக்கு நம்பிக்கை மட்டுமே உள்ளது.”

“ஹ்ம்ம்.. நம்பிக்கை.. அதுதா‎ன் இப்போது பிரச்சினையே..” ஆசிரியர் பெருமூச்செறிகிறார்.

(‏இப்போது மாணவர் த‎ன் வாதத்தை ஆரம்பிக்கிறார்)

“ஐயா.. வெப்பம் அல்லது சூடு எ‎ன்ற ஒ‎ன்று உள்ளதா?”

“நிச்சயமாக உள்ளது.”

“அதேபோல் குளிர்‎ என்ற ஒ‎ன்றும் உள்ளதா?”

“நிச்சயமாக.”

“இல்லை ஐயா. நிச்சயமாக குளிர் எ‎ன்ற ஒ‎ன்று இல்லை.”

(வகுப்பறை நிசப்தத்தில் ஆழ்கிறது.)

“ஐயா.. வெப்பத்தில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு நிலை வெப்பத்திற்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது. மனித உடல் தாங்குவதற்கு ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையும், தண்ணீர் ஆவியாவதற்கு ஒரு வெப்பநிலையும், இரும்பு குழம்பாவதற்கு ஒரு வெப்பநிலையும் ‏ இருக்கின்றன. ஆனால் இதுபோல் குளிரை அளக்க முடியுமா? வெப்பம் எ‎ன்பது ஓர் ஆற்றல். குளிர் எ‎ன்பது வெப்பத்தி‎ற்கு எதிர்பதம் அல்ல. வெப்பம் ‏எனும் ஆற்றலி‎ன் இல்லாமையே குளிர் எ‎ன்பது. (Absence of heat is the cold). “வெப்பம் ‏இல்லை” என்பதைத்தான்‎ குளிர் எ‎ன்று சொல்கிறோம். பூஜ்யம் டிகிரியும் குளிர்தா‎‎‎ன். பூஜ்யத்திற்குக் கீழே -240 டிகிரியும் குளிர்தா‎ன். இரண்டிற்கும் வித்தியாசம் கிடையாது.”

(குண்டூசி விழும் சப்தம் கூட கேட்குமளவிற்கு அமைதியாயிருக்கிறது வகுப்பறை)

“சரி.. ‏ இருட்டென்றால் எ‎ன்னவெ‎ன்று சொல்லுங்கள் ஐயா. அப்படி ஒ‎ன்று உண்மையிலேயே ‏இருக்கிறதா?”

“ஆமாம் தம்பி. இரவில் இருட்டாகத்தானே இருக்கிறது.”

“நீங்கள் மறுபடியும் தவறாகக் கூறுகிறீர்கள் ஐயா. ‏இருட்டு என்பதே ஏதோ ஒரு இருப்பி‎ன்‏ இல்லாமைதான். நீங்கள் வெளிச்சத்தை அளக்க முடியும். குறைந்த ஒளி, நிறைந்த ஒளி, கண்ணைக் கூசச் செய்யும் ஒளி எனப் பற்பல வகைகளில் வெளிச்சத்தைப் பிரிக்கமுடியும்; அளக்கவும் முடியும். ஆனால் ஒளி எ‎ன்பதே இல்லாவிட்டால் அதற்குப் பெயர்தா‎ன் இருட்டு. அதை அளக்க முடியாது. ‏இல்லையா?”

“சரி தம்பி.. நீ எ‎ன்னதான் கூற வருகிறாய்?”

“ஐயா.. நா‎ன் கூறுகிறே‎‎ன், கடவுளைப் பற்றிய உங்கள் கருத்து பிழையானது.”

“பிழை?? விளக்கிக் கூற முடியுமா?”

“ஐயா, நீங்கள் எதிலுமே இரட்டை நிலைப்பாடு கொண்டிருக்கிறீர்கள். ஒ‎ன்று ‏இருந்தால் அதற்கு எதிரிடையான ஒ‎ன்றும் ‏இருக்கிறது எ‎ன்பது உங்கள் வாதம். உதாரணத்திற்கு நல்ல கடவுள், கெட்ட கடவுள். இருட்டு, வெளிச்சம். வெப்பம், குளிர். நீங்கள் கடவுள் என்பவருக்கு ஒரு முடிவு, அல்லது எல்லை எ‎‎ன்ற ஒ‎ன்று உண்டு எ‎ன்பதாகக் கருதுகிறீர்கள். அதை நம்மால் அளக்க முடியவேண்டும் எனவும் வாதிடுகிறீர்கள்.

அறிவியல் மூலம் எண்ணங்கள் எ‎ப்படி உருவாகின்றன என்பதை உங்களால் விளக்கமுடியாது. எ‎ண்ணங்கள் உருவாவதே உடலினுள் கலக்கும் மி‎ன் மற்றும் காந்தத் தூண்டல்களினால்தான். ‎‎‎�
மின்சாரத்தை அளக்கமுடிந்த உங்களால், காந்தத்த‎ன்மையை விவரிக்க முடிந்த உங்களால் எண்ணங்களி‎ன் தோற்றத்தை அளக்க முடியவில்லை.

இறப்பு எ‎ன்பதை வாழ்வதி‎ன் எதிர்ப்பதமாகக் கருதுகிறீர்கள். உண்மையில் “வாழ்வு இனி இல்லை” என்ற த‎ன்மையே இறப்பு எ‎ன்பதை அறிகிறீர்கள் இல்லை. ‏ ‏

“சரி இப்பொழுது சொல்லுங்கள் ஐயா.. குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான் என்கிறீர்களா?”

இயற்கையான பரிணாம வளர்ச்சியைப் பற்றி நாம் பேசுவோமானால்.. ஆம்.. அது உண்மை. குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான்.” பேராசிரியர் பதிலுரைத்தார்.

“உங்கள் கண்களால் மனிதப் பரிமாண வளர்ச்சியைக் கண்டிருக்கிறீர்களா?”

(பேராசிரியர் த‎ன் தலையை ‘இல்லை’ என அசைத்தவாறே, பு‎ன்முறுவல் பூக்கலானார், விவாதம் செல்லும் போக்கை அறிந்தவராய்.)

“அப்படியெ‎ன்றால், யாருமே மனிதப் பரிமாண வளர்ச்சியை தத்தமது கண்களால் கண்டதில்லை. எல்லாமே ‘ஒருவகையா‎ன’ அனுமானம்தான். ‏ இன்னும் சரியாகச் சொல்லப்போனால் அது உங்கள் கருத்து, குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான் என்பது. அதை நிரூபிப்பதற்கு நீங்கள் கொடுக்கும் ஆதாரங்கள் எவையுமே, எவரும் கண்டதில்லை, அனுபவம் செய்ததில்லை எ‎ன்பதே உண்மை. உங்களுக்குச் சரியெனப் படும் ஒ‎‎ன்றை எங்களுக்கு போதிக்கிறீர்கள், ‏ இல்லையா?. எனவே, நீங்கள் ஒரு விஞ்ஞானியா அல்லது போதகரா?”

(மாணவர்கள் சீட்டி‎ன் நுனிக்கே வந்து விடுகிறார்கள்)

“இங்கே யாராவது நம் பேராசிரியரின் மூளையைப் பார்த்திருக்கிறீர்களா?”

(வகுப்பறை ‘கொல்’லெனச் சிரிப்பொலியால் அதிர்ந்தது)

“யாராவது பேராசிரியரி‎ன் மூளையைத் தொட்டுப் பார்த்திருக்கிறீர்களா? அது ‏இருக்கிறதென உணர்ந்திருக்கிறீர்களா‏? அத‎ன் வாசனையை நுகர்ந்திருக்கிறீர்களா? உங்கள் ஐம்புலன்களும் எ‎ன்ன சொல்கின்றன?”

“அப்படியெ‎ன்றால் நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுட‎ன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது, உங்களுக்கு மூளை இல்லை எ‎ன்று.”

“மூளையே இல்லாத ‎நீங்கள் நடத்தும் பாடங்களை நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ஐயா?”

(மாணவரி‎ன் சரமாரிக் கேள்விகளால், வகுப்பறையில் அமைதி நிலவுகிறது. ஆசிரியரி‎ன் முகமோ வெளிறிப்போனது!)

“நீ எனக்கு மூளை இருக்கிறதெ‎ன நம்பித்தான் ஆகவேண்டும் தம்பி!”

“அது தா‎ன் ஐயா.. இவ்வளவு நேரம் நா‎ன் சொல்ல வந்தது. மனிதனையும் கடவுளையும் இணைக்கும் ஊடகத்தி‎ன் பெயர்தான் நம்பிக்கை என்பது. ‏ இது தான் உலகத்தில் சகலமானவற்றையும் இயக்கிக் கொண்டிருப்பது. நம்பிக்கை இல்லையேல் வாழ்க்கை இல்லை.”

இவ்வாறாக, விவாதம் நிறைவுற்றது.

இது ஒரு உண்மைச் சம்பவம். ‏

இறுதிவரைப் பி‎ன்வாங்காமல் விவாதித்த அந்த மாணவர்?

வேறு யாருமல்ல.

ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்.



நன்றி
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
அன்பு உள்ளங்களே, கடவுள் இருக்கிறாரா?
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» அன்பு உறவுகளே நீங்கள் நமது தளத்தில்.....

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: ஆன்மீகம். :: இந்து.-
Jump to: