ஏசுவின் திருஉருவப்படத்தில் எண்ணெய் வடிவதாக பரபரப்பு: வால்பாறையில் அதிசயம் வால்பாறையை அடுத்துள்ள சேக்கல்முடி எஸ்டேட் பகுதியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருபவர் லலிதா. இவரது வீட்டில் 12 ஆண்டுகளுக்கு முன் வில்லோனி எஸ்டேட் பகுதியை சேர்ந்த வின்சென்ட் வரைந்து கொடுத்த ஏசுவின் திரு உருவப்படம் வைத்துள்ளார்.
இந்த ஏசுவின் படத்தில் ஏசுவின் நெற்றியில் இருந்து எண்ணெய் வடிவதாக பரபரப்பு கிளம்பியது. இதனை லலிதாவின் மகன் கர்க்கின் பிரதாப் பார்த்து தொட்டு வணங்கினார்.
அப்போது தாரை, தாரையாக எண்ணெய் வடிந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் அக்கம் பக்கத்தினரிடம் பரவியது. அவர்கள் விரைந்து வந்து அதிசயமாக பார்த்து செல்கிறார்கள்.
சோலையார் அணை புனித சூசையப்பர் ஆலய பங்கு தந்தை ஜஸ்டினும் வந்து பார்த்தார். ஏசுவின் பட நெற்றியில் இருந்து வடியும் எண்ணெய்யை சிறு கண்ணாடி கிண்ணத்தில் சேகரித்து வைத்து இருப்பதாகவும், அதில் இருந்து நறுமணம் வருவதாகவும் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் சேக்கல் முடி, சோலையார் அணை, உருளிக்கல், கல்யாணப்பந்தல் மற்றும் வால்பாறை வட்டாரப் பகுதிகளிலும், கேரள மாநிலம் மளுக்கப்பாறை பகுதியிலும் பொது மக்களிடம் அதிசயமாக பேசப்பட்டு வருகிறது.