ஒஸாமாபின்லேடனின் பாகிஸ்தானின் அபோதாபாத் இல்லம், அதன் உட்கட்டமைப்பு என்பன இப்போது கூகுள் முப்பரிமாண வடிவமைப்பின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளன.
கடும் பாதுகாப்பு மதில்களுடன் காணப்பட்ட இந்த வீட்டுக்குள் உங்கள் கம்பியூட்டரைப் பாவித்து இப்போது நீங்களும் உள்ளே பிரவேசிக்கலாம்.
அபோதாபாத்தில் சாதாரணமாக காணப்படும் ஒரு வீட்டை விட இந்த வீடு எட்டு மடங்கு பெரியது. இதன் மதில் 18 அடி உயரமானது.
இந்த வீடு பாகிஸ்தான் அதிகாரிகளுக்குத் தெரியாமல் தாக்கப்பட்டமை பாகிஸ்தானை ஆத்திரமடையச் செய்துள்ளது.
எதிர்காலத்தில் அமெரிக்கா இப்படி தன்னிச்சையாக நடந்துகொண்டால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த கம்பியூட்டர் முப்பரிமாண காட்சிகளும் வெளியாகியுள்ளன.
பின்லேடனின் வீட்டுக்குள் போகலாமே? (காணொளி, பட இணைப்பு)