மலேசியாவில் உள்ள மத்திய செலாங்கர் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நேற்று திடீரென 2 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் அங்கிருந்த அனாதை இல்லம் மண்ணுக்குள் புதைந்தது.
தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் விரைந்து வந்து மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இருந்தும் அனாதை இல்லத்தில் தங்கியிருந்த 15 மாணவர்கள் மற்றும் அந்த இல்லத்தின் நிர்வாகி ஒருவரும் உயிரிழந்தனர்.
இவர்கள் தவிர 9 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஏற்கனவே பெய்த மழை காரணமாக பூமிக்குள் இருந்த ஈரத்தினால் இச்சம்பவம் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மலேசியாவில் நிலச்சரிவு: 15 அனாதை குழந்தைகள் பலி (வீடியோ இணைப்பு)